25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இன்று இந்தியா-தென் கொரியா மோதல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இன்று இந்தியா-தென் கொரியா மோதல்.

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி இன்று தனது முதல் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது.

ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 1988-ம் ஆண்டு முதல் 21 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் பிரிவில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, சீனா உள்ளிட்ட 5 அணிகள் ‘எலைட்’ பிரிவிலும், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 5 அணிகள் ‘சாலஞ்ச்’ பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

முதற்கட்டத்தில் லீக் முறையில் போட்டிகள் நடைபெறும். பின்னர் ‘எலைட்’ பிரிவில் உள்ள 5 அணிகளும் காலிறுதியில் விளையாடும். ‘சாலஞ்ச்’ பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளும் காலிறுதிக்கு முன்னேறும்.

இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி, 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற தென் கொரியாவை சந்திக்கிறது. இதையடுத்து செப்டம்பர் 6-ம் தேதி மலேசியாவையும், செப்டம்பர் 8-ம் தேதி ஜப்பானையும், செப்டம்பர் 9-ம் தேதி சீனாவையும் எதிர்கொள்கிறது.

இந்தியா ஏற்கனவே 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ளது. கேப்டன் ஷிலெய்மா சானு தலைமையிலான இந்திய அணி மீண்டும் சிறப்பாக செயல்பட்டால், தொடர்ந்து 3-வது முறையாக கோப்பையை வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News