பால் பூரி (Paal Poori).
தேவையான பொருட்கள்:
பூரி செய்ய:
கோதுமை மாவு அல்லது மைதா - 1 கப்,உப்பு - ஒரு சிட்டிகை, நெய் அல்லது எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
பால் தயாரிப்புக்கு: பால் - 1 லிட்டர்,சர்க்கரை - ½ கப், பாதாம் மற்றும் முந்திரி - தலா 10 (பாலில் ஊறவைத்தது,)
குங்குமப்பூ பால் - 3 தேக்கரண்டி,ஏலக்காய் தூள் - ¼ தேக்கரண்டி.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சிறிதுகெட்டியாகப் பிசைந்து, 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பின் சிறிய உருண்டைகளாக உருட்டி, மெலிதாக பூரி போல தேய்த்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரிகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி மிதமான தீயில் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
ஊறவைத்த பாதாம் மற்றும் முந்திரியைச் சிறிதளவு பால் சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
கொதித்த பாலில் அரைத்த முந்திரி-பாதாம் விழுது மற்றும் ½ கப் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அதனுடன் குங்குமப்பூ பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
தயாரித்து வைத்துள்ள சூடான சுவையான பாலைப் பொரித்த பூரிகளின் மீது ஊற்றி, 10 நிமிடங்கள் ஊறவிட்டுப் பரிமாறவும்.
0
Leave a Reply