ஸ்வீட் பூரி ( SWEET POORI ).
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1 கப் (250 கிராம்),
ரவை - 2 ஸ்பூன்,
சோள மாவு - 1 சிறிய ஸ்பூன் (விரும்பினால்),
நெய் அல்லது டால்டா - 2 ஸ்பூன்,
சர்க்கரை - 1 கப் (பாகு காய்ச்ச),
ஏலக்காய் தூள் - சிறிது,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் உருக்கிய நெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து, 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும். கம்பி பதம் வந்தவுடன் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, மெல்லிய பூரிகளாகத் தேய்க்கவும். பூரியின் மேல் பகுதியில் லேசாகக் குத்திக் கொள்ளவும் (உப்பாமல் இருக்க).
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்த பூரிகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
பொரித்தெடுத்த பூரிகளைச் சூடான சர்க்கரை பாகில் 1 முதல் 2 நிமிடங்கள் வரை போட்டு எடுக்கவும்.சுவையான ஸ்வீட் பூரி தயார்.
0
Leave a Reply