செஸ் தரவரிசையில் இடம்பிடித்த இளம் வீராங்கனை.
சர்வதேச செஸ் கூட்டமைப்பான ‘பிடே’ சார்பில் செப்டம்பர் மாதத்துக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த எலெனா சர்மா, 4 வயது, 6 மாதம், 16 நாட்கள் என்ற வயதில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ‘பிடே’ தரவரிசைத் தொடரில் பங்கேற்ற அவர், 1,432 புள்ளிகளைப் பெற்றார்.
இதன் மூலம் ‘பிடே’ தரவரிசையில் இடம்பிடித்த இளம் வீராங்கனை என்ற பெருமையை எலெனா சர்மா பெற்றுள்ளார்.
இருப்பினும், ஒட்டுமொத்தமாக இளம் வயதில் ‘பிடே’ தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற வீரர் என்ற சாதனை மகாராஷ்டிராவைச் சேர்ந்த சர்வாக்யா சிங் குஷ்வாஹா வசம் உள்ளது. அவர் 3 வயது, 7 மாதம், 20 நாட்கள் வயதில், 2025 டிசம்பர் மாத தரவரிசையில் இடம்பிடித்திருந்தார்.
0
Leave a Reply