25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் அசத்தல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் அசத்தல்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்றன. இந்த தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்தம் 39 பதக்கங்களை வென்றனர்.

இந்தியாவின் பதக்கப் பட்டியல்:

  • 🥇 தங்கம் – 13
  • 🥈 வெள்ளி – 17
  • 🥉 வெண்கலம் – 9

மொத்தம் 39 பதக்கங்களுடன் இந்தியா தனது திறமையை மீண்டும் நிரூபித்தது.

பாரா போட்டியிலும் இந்தியாவின் சாதனை.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பிரிவிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றனர்.

கடந்த ஆறு காமன்வெல்த் சீசன்களில் இந்தியா மொத்தம் 7 பதக்கங்கள் மட்டுமே வென்றிருந்த நிலையில், இந்த முறை அதே எண்ணிக்கையை ஒரே தொடரில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.

அடுத்த காமன்வெல்த் போட்டி இந்தியாவில்..

காமன்வெல்த் விளையாட்டின் அடுத்த சீசன் 2030ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது. கிளாஸ்கோவில் நடைபெற்ற நிறைவு விழாவில், இந்தியாவின் சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். அதனைத் தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு கொடி அதிகாரப்பூர்வமாக ஆமதாபாத் நகருக்கு ஒப்படைக்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News