ரேஸில் அஜித் அணி 2-ம் இடம்.
நடிகர் அஜித் ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர பார்சிலோனா கார் பந்தயத்தில் பங்கேற்றார். இதில் அவரது அணி, ஜிடி3 ஏஎம் பிரிவில் 2-ம் இடத்தைப் பிடித்தது. ஒட்டுமொத்தப் போட்டியில் 5-ம் இடத்தைப் பெற்றது.
இந்திய தேசியக்கொடியை ஏந்தியபடி அஜித் தனது வெற்றியைக் கொண்டாடினார்.
இதற்கிடையே, அவரது கார் ரேஸ் ஆவணப்படமான ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தின் டிரெய்லரில் அவரது மனைவி ஷாலினி பேசிய வசனம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
“அவர் தோல்விகளைக் கண்டு பயந்ததில்லை. எதுவும் சாத்தியமற்றது அல்ல என்ற அந்த சில நொடிப்பொழுதுக்காக மட்டுமே அவர் மீண்டும் ரேஸிற்கு திரும்பினார்” என்ற வசனம் தற்போது டிரெண்டாகி வருகிறது.
0
Leave a Reply