தமிழகத்தில் இனி டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ்?
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்கும் நடைமுறை தொடர்பாக புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அச்சிடப்பட்ட Driving Licence (DL) மற்றும் Registration Certificate (RC) வழங்கும் நடைமுறைக்கு பதிலாக, DigiLocker மற்றும் mParivahan போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் ஆவணங்களைப் பயன்படுத்தும் நடைமுறை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்களது முக்கிய ஆவணங்களை ஸ்மார்ட்போனிலேயே வைத்துக்கொண்டு தேவையான நேரத்தில் காண்பிக்க முடியும்.
காகித ஆவணங்களின் பயன்பாட்டைக் குறைத்து, போக்குவரத்து தொடர்பான சேவைகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
0
Leave a Reply