கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர், மேற்கு தெப்பம் சந்தை தெருவில் உள்ள கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (23.09.2026) தொடங்கி வைத்தார்.கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமாக கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் 1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்தியாவின் மிகப்பெரிய தலைமை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமாக வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் துணி ரகங்களை 90 ஆண்டுகளுக்கு மேலாக கோ ஆப் டெக்ஸ் என்ற வணிக முத்திரையுடன் 146 விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. பட்டு மற்றும் பருத்தி ரகங்களின் பாரம்பரிய மற்றும் நவீன கால வடிவமைப்புகளைக் கொண்டு சிறந்த கைத்தறி ரகங்களை வடிவமைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
தீபாவளி பண்டிகை காலத்தினை முன்னிட்டு நவீன காலத்தின் தேவையினை கருத்தில் கொண்டு புதிய வடிவமைப்புகளில் பட்டு மற்றும் பருத்தி சேலைகள், பருத்தி வேட்டிகள், படுக்கை விரிப்புகள் போன்ற ஏராளமான ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், இளைய தலைமுறை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் புதிய வடிவமைப்புகளில், அவரது தேவைகளை நிறைவேற்றிடும் வண்ணம் பாரம்பரிய பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் புதுமையான வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களுடனும் பல மதிப்புக் கூட்டப்பட்ட ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கைத்தறி ரகங்களின் விற்பனையினை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும், விசைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கியுள்ளது. அதன் பொருட்டு தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகர், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் உள்ள 3 கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு சேர்த்து ரூ.1.54 கோடி தீபாவளி விற்பனை குறியீடாக தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் விற்பனை நடைபெற்றுள்ளது.
கோ ஆப் டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின்வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக கொள்முதல் செய்யலாம். கோ ஆப் டெக்ஸ்-இன் மாதாந்திர சேமிப்புத்திட்டத்திலும் சேர்ந்து வாடிக்கயாளர்கள் பயன்பெறலாம்.பொதுமக்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் கைத்தறி தொழிலாளர்களின் வாழ்வதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் தீபாவளி பண்டிகைக்கு கோ ஆப் டெக்ஸ் மூலம் ஜவுளி ரகங்களை வாங்கி பயன்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் கோ ஆப் டெக்ஸ் மண்டல மேலாளர் திரு.சந்திரசேகரன், துணை மேலாளர் திருமதி தீபா, விற்பனை நிலைய மேலாளர் திருமதி கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply