6G தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு புதிய வாய்ப்பு!
அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பமான 6G-யை மேம்படுத்தும் சர்வதேச முயற்சிகளில் இந்தியாவும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பில் அமெரிக்கா உட்பட 25 நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து 6G தொழில்நுட்ப வளர்ச்சியில் பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சர்வதேச ஒத்துழைப்பு மூலம் தொழில்நுட்ப ஆராய்ச்சி, தரநிலைகள் மற்றும் எதிர்கால தகவல் தொடர்பு அமைப்புகள் தொடர்பான பணிகளில் இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கலாம்.
மேலும், மத்திய அரசின் Bharat 6G திட்டத்திற்கும் சர்வதேச அளவில் ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு கிடைக்க இந்தக் கூட்டமைப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply