25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சிறுநீரக கற்களைக் கரைக்க ...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறுநீரக கற்களைக் கரைக்க ...

 சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் சில உணவு முறைகளை பின்பற்றினால், கற்கள் கரைய உதவும்.

பார்லித் தண்ணீர், இது சிறுநீரக நச்சுகளை நீக்கி, கற்களின் அடர்த்தியைக் குறைத்து அவை சிறுநீர் மூலம் வெளியேற உதவுகிறது.

 எலுமிச்சை சாறுஇதில் உள்ள சிட்ரேட்டுகள் கற்கள் உருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே உள்ள கற்களை உடைக்கும் திறனையும் கொண்டுள்ளது.

 இளநீர் உடலை நீரேற்றத்துடன் வைத்து, சிறுநீரகப் பாதையில் தேவையற்ற தாதுக்கள் படிவதைக் குறைத்து, கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.

 மாதுளையில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்டுகள் மற்றும் இயற்கை அமிலங்கள், கற்கள் உருவாகக் காரணமான தாதுக்கள் படிவதைத் தடுக்கின்றன.

கொத்தமல்லி இயற்கையாகவே சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது. மேலும் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை நீக்கவும் செயல்படுகின்றன.சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் கொத்தமல்லி சாறு தினமும் குடித்து வந்தால் சிறுநீரக கற்களை விரைவில் அகற்றலாம்.

தக்காளியில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் பிரச்சனையை போக்க உதவும்.சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், தக்காளி சாற்றில் உப்பு மற்றும் மிளகு தூள் கலந்து குடிக்கலாம்.

தினமும் அதிக தண்ணீர் குடிப்பதும், உணவில் உப்பின் அளவை குறைப்பதும் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்க அத்தியாவசியமாகும். இந்த உணவு முறைகளை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News