குறு, சிறு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் புதிய ஒப்பந்தப்பணிகளை பெற்றிடும் வகையில் தனியார் துறை விற்பனையளார் மேம்பாட்டுக் கண்காட்சி.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறு, சிறு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் புதிய ஒப்பந்தப்பணிகளை பெற்றிடும் வகையில் தனியார் துறை விற்பனையளார் மேம்பாட்டுக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி திரு.நாராயணன் அப்பு அவர்கள் முன்னிலையில் (27.08.2026 ) தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டமானது பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்தி திறன் கொண்ட மாவட்டமாக திகழ்கிறது. இங்கு பட்டாசு தொழில், சிறுதானியம் உற்பத்தி, ஆடை தயாரிப்பு, விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இருப்பினும் புவியியல் ரீதியாகவும், தமிழகத்தின் பிற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் ஆகியவை பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக உள்ள பொறியியல் கல்லூரிகள், கலை கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் காரணமாக அதிக எண்ணிக்கையிலானோர் கல்வி மற்றும் தொழில் கல்வி பயின்றுள்ளதனால் மனிதவளமிக்கமாவட்டமாகஉள்ளது.இம்மாவட்டத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மனித வளத்தினை தேர்ந்தெடுப்பதிலும், கல்வி பயின்றுள்ள வேலை நாடுநர்களுக்கு பணி கிடைப்பதிலும் ஒருவித இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்காக தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு சரியான சந்தை வாய்ப்புகளும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களும் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது என தொழில் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் பல்வேறு சூழ்நிலைகளில் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அதேபோல், இந்திய அரசு சேவை துறைகளுக்கு தேவையான உதிரி பாகங்களை புதிய தொழில் முனைவோர்கள், குறு, சிறு வணிக நிறுவனங்களில் இருந்து பெறுவதில் தகவல் தொடர்பு இடைவெளி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சேவைத்துறைகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள், பணியாளர்கள், சேவைப்பணிகள் போன்றவற்றில் குறு, சிறு நிறுவனங்களும் பங்கேற்று ஒப்பந்தங்களைப் பெறும் வகையில் இந்த இணைப்புக் கண்காட்சி இன்று (27.08.2026) மற்றும் நாளையும் (28.08.2026) நடைபெறுகிறது.இதன் மூலம் விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திப் திறனை பயன்படுத்தி சேவைத்துறைகளில் தேவை மற்றும் விதிமுறைகளை அறிந்து புதிய ஒப்பந்தங்களைப் பெற்று பயன்பெற வேண்டும். இதன் மூலம் புதிய பணி வாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். இதனை நல்ல முறையில் குறு, சிறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கண்காட்சியில் அரசு மற்றும் பொதுத்துறையைச் சேர்ந்த 40 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க திட்டம், டான்சி மத்திய காலனி பயிற்சி மையம், தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகம், காதி கிராம தொழில் வாரியம், உணவுப் பாதுகாப்பு கழகம், ஒருங்கிணைந்த ஜவுளி மேம்பாட்டு மையம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், மத்திய இரயில்வே, இந்திய அஞ்சல் துறை, அரசு இ-வணிக (GEM), கல்பாக்கம் அனல் மின்நிலையம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்திய கனரக வாகன உற்பத்தி தொழிற்சலை போன்ற நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில் சிப்பி பொது மேலாளர் திரு.அன்புராஜ், என்.எல்.சி முதன்மை செயல் அலுவலர் திரு.அரவிந்த் ராஜா, என்.பி.சி.எல் இயக்குநர் திரு.அசோக் பாட்டியா, குறு, சிறு தொழில் நிறுவனம் இணை இயக்குநர் திரு.தயாளன், தமிழ்நாடு தொழில் மையம் பொது மேலாளர் திரு.கண்ணன், உதவி இயக்குநர் திரு.கிரண் தேவ், சடுலூரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply