விமான ஒப்பந்தம்: தஞ்சை நிறுவனத்திடம் இருந்து 100 சிறிய ரக விமானங்களை வாங்குகிறது கோவை நிறுவனம்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி கிராமத்தில் விமான தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சிறிய ரக விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் பெட்ரோல் என்ஜின் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட உள்ளன. இரண்டு பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த விமானங்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட இருக்கின்றன.
வர்த்தக பயன்பாட்டுக்கான விமானம் ரூ.15 கோடி வரையிலும், ராணுவ பயன்பாட்டுக்கான விமானம் ரூ.1 கோடி வரையிலும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூரில் அமைய உள்ள விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 100 சிறிய ரக விமானங்களை வாங்க கோவையைச் சேர்ந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தத் திட்டம் தமிழகத்தின் விமானத் தொழில்துறையில் புதிய தொடக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply