25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளில்  பயன்படுத்தப்பட்ட    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள காகித சுருள் (paper roll)  அகற்றும் பணியினை  மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித் தலைவர்  அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள காகித சுருள் (paper roll) அகற்றும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட  VVPAT - வாக்குப்பதிவு இயந்திரத்தில்  மீதமுள்ள paper roll - களை அகற்றும் பணிக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிட்டங்கியினை அங்கீகரிக்கப்பட்ட  அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள்  (06.08.2026) திறந்து வைத்தார்.தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026-இல், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 தொகுதிகளில் நடைபெற்றது.

அதன்படி, இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 269 விவிபேட் இயந்திரங்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 308 விவிபேட் இயந்திரங்களும்,  சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 291 விவிபேட் இயந்திரங்களும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட  290 விவிபேட் இயந்திரங்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 281 விவிபேட் இயந்திரங்களும்,
 
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 270 விவிபேட் இயந்திரங்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 292 விவிபேட் இயந்திரங்கள்  என மொத்தம்  2,001 விவிபேட் இயந்திரங்களில்  உள்ள வெப்ப உணர் காகித சுருள்களை (VVPAT Paper Roll-Thermal Paper) அகற்றும் பணிகள் இன்று (06.08.2026) முதல் தொடங்கி  7 நாட்கள் நடைபெறவுள்ளது.

மேலும், பழுதடைந்த 308 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களுரூ, பெல் நிறுவனத்திற்கு அனுப்பிவைப்பதற்கான பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என  மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News