25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள்  ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 அங்கன்வாடி மைய கட்டடங்களை திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 அங்கன்வாடி மைய கட்டடங்களை திறந்து வைத்தார்.

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள்  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S ., அவர்கள் தலைமையில், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் முன்னிலையில் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட இராஜபாளையம். ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில்  ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 அங்கன்வாடி மைய கட்டடங்களை  (25.07.2026) திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வளரிளம் குழந்தைகள் முன்பருவ கல்வியினை சிறந்த முறையில் கற்றிடவும், ஊட்டச்சத்து குறைபாடின்றி நல்ல ஆரோக்கியத்துடன் நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் மூலம் ஏராளமான திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் 1,504 அங்கன்வாடி மையங்கள் மூலம் 0 முதல் 6 மாதம்  வரை உள்ள 36,000 குழந்தைகளுக்கு இணைவுணவும், 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள 29,061 குழந்தைகளுக்கு முட்டையுடன் இணைவுணவும், 8,475 கர்ப்பிணி தாய்மார்கள், 9,050 பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துடன் இணைவுணவும்  வழங்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு வண்ணச்சீருடைகளும், திங்கட்கிழமை முட்டையுடன் தக்காளிசாதமும், செவ்வாய்க்கிழமை கலவை சாதத்துடன் பச்சைப்பயறு அல்லது கொண்டைக்கடலையும், புதன்கிழமை முட்டையுடன் புலாவ் சாதமும், வியாழக்கிழமை முட்டையுடன் எலுமிச்சை சாதமும், வெள்ளிக்கிழைமை பருப்பு உருளைக்கிழங்கு சாதமும், சனிக்கிழமை கலவை சாதமும் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவானது சுத்தமான முறையில் சுகாதாரத்துடன் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான கட்டட வசதியும், காற்றோற்டத்துடன் கூடிய இடங்களில் கல்வி கற்பிக்கும் வகையில் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வடகரை அங்கன்வாடி மையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கொத்தன்குளம் காலனி அங்கன்வாடிமையம், நூர்சாகிபுரம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொட்டல்பட்டி  அங்கன்வாடி மையம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அழகாபுரி அங்கன்வாடி மையம், ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாத்தூர் அங்கன்வடி மையம்,  ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதுப்பட்டி காலனி அங்கன்வாடி மையம் என மொத்தம் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 அங்கன்வாடி மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதனை நல்ல முறையில் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை திட்ட இயக்குநர் திருமதி வானதி,  சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி  திட்ட அலுவலர் திருமதி ஷீலா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News