25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வேண்டிய வரம் தரும் வத்திராயிருப்பு  சேதுநாராயணப் பெருமாள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேண்டிய வரம் தரும் வத்திராயிருப்பு  சேதுநாராயணப் பெருமாள்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு   நடு அக்ரஹாரம் பகுதியில் சேதுநாராயண பெருமாள் கோவில் அமைந்துள் ளது. இவ்வூரின் நீர் நிலைகளில் தண்ணீர் எப்போதும் வற்றாத இருப்பாக இருப்பதால், 'வற்றா இருப்பு' என்ற பெயர் ஏற்பட்டு அதுவே காலப்போக்கில் 'வத்திரா யிருப்பு என்று மருவிவிட்டது. வத்திராயிருப்பில் வாழ்ந்து வந்த அழகர் ஐயங்கார் என்பவரால், இந்தக் கோவில் நிர்மாணிக்கப் பட்டது என்றும், ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.

இக்கோவிலில் சேதுநாராய ணப்பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி சன்னிதிகளும், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகி யோரின் உபசன்னிதிகளும் உள் ளன. கோவிலுக்கு தேரும் இருக் கிறது. இந்த ஆலயத்தில் பாஞ்ச ராத்திர முறைப்படி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கின்றது. இங்கு ஆவணி மாதம் நடைபெறும் திருவிழா முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.

வத்திராயிருப்பில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் சேதுநாராயணப் பெருமாள் சுவா மிக்கு, 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் இறைவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து சுவாமி வீதி உலா வருவார். அதன்பிறகு சேதுநாராயணப் பெருமாள், கள்ளழகர் வேடமிட்டு ஆற்றில் இறங்குவார்.

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்கவாசல் திறக்கப்படும். முன்னதாக அதி காலை 3 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ ஆழ்வார் களுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து நாலாயிரம் திவ்ய பிரபந்தமும், ஆண்டாள் திருப்பாவையும் ஓதப்படும். பின்னர் பரமபத வாசல் வழியாக சேது நாராயணப் பெருமாள் வெளியேறி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News