25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ரோஜா பூ  செடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரோஜா பூ  செடி

ரோஜா பூ  செடி ரோஸ் செடியாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த ஒரு செடியாக இருந்தாலும் சரி செடிகளை வாங்கும்போது அதிகமாக துளிர்களை உள்ள செடிகளை மட்டும் தேர்வு செய்து வாங்கவும். ரோஸ் செடி வாங்கும் போது ஐந்து இலைகள் உள்ள செடிகளை தேர்வு செய்து வாங்கினால் ரோஸ் செடி நன்றாக வளரும்.  நாம் ரோஸ் செடியில் (rose plant) பூக்கள் பறிக்கிறோம் என்றால் காம்புடன் மட்டும் பறிக்க கூடாது. அதனுடன் இரண்டு இலைகளை சேர்த்து பறிக்க வேண்டும். அப்போது தான் ரோஸ் செடியில் அடுத்த துளிர்கள் விட்டு நன்கு வளர ஆரம்பிக்கும்.ரோஸ் செடிக்கு இயற்கை உரமாக வாரத்தில் ஒரு முறையாவது சமையலறை கழிவுகளான டீ தூள், காபி தூளி, வெங்காய தோல், பூண்டு தோல், முட்டை ஓடு மற்றும் மக்கக்கூடிய காகிதங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் மற்றும் சிறுதளவு மணல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பிளாஸ்ட்டிக் பேனரில் வைத்து மூடி வைக்கவும்.

ஒரு வாரம் வரை தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு குச்சியால் கிளறி விடவும். ஒரு வாரம் கழித்து, இந்த கலவையை ரோஸ் செடிக்கு உரமாக இட்டு வந்தால் ரோஸ் செடி செழிப்பாக வளரும்.ரோஸ் செடிக்கு வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றாமல் மண், ஊட்ட சத்துக்காக நம் வீட்டில் இருக்கும் பழைய சாதத்தின் நீரை மட்டும் வடிகட்டி தண்ணீராக ஊற்றலாம். இவ்வாறு ஊற்றுவதால் செடி நன்றாக வளரும்வாழைப்பழ தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை ரோஸ் செடிக்கு ஊற்றி வந்தால் ரோஸ் செடி நன்றாக வளரும்.ரோஸ் செடிகளுக்கு உரம் வைக்கப்போகிறோம் என்றால் அன்று முழுவதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற கூடாது. செடிகளுக்கு உரம் வைக்கும் போது மாலை நேரத்தில் வைத்தால் அதிக பலன் கிடைக்கும்..

ரோஸ் செடிக்கு) வாரம் ஒரு முறையாவது இயற்கை டானிக் ஊற்றுவதால் செடி நன்றாக வளரும் அதுமட்டும் இன்றி பூக்களும் அதிகளவு பூக்கும்.இரண்டு கிலோ கடலைப்பிண்ணாக்கு வாங்கி கொள்ளவும் மற்றும் ஒரு பெரிய பிளாஸ்ட்டிக் பேனரை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.இந்த பேனரில் கடலை பிண்ணாக்கை கொட்டவும். பின்பு 10 லீட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.பின்பு அந்த பேனரை காற்று புகாத அளவிற்கு நன்றாக மூடி வைக்கவும். (காற்று உள்ளே சென்று விட்டால் அவற்றில் புழுக்கள் வைத்து விடும் எனவே காற்று புகாத அளவிற்கு பேனரை நன்றாக மூடிவைத்து கொள்ளவும்)ஐந்து நாட்கள் கழிந்து இந்த கலவையை திறந்து பார்த்தால் நன்றாக நுரைத்து இருக்கும். இந்த கலவையை ஒரு பக்கெட் அளவிற்று எடுத்து கொண்டு 10 லீட்டர் தண்ணீரில் கலந்து ரோஸ் செடி மற்றும் அனைத்து செடிகளுக்கும் தண்ணீராக ஊற்றி வந்தால் ரோஸ் செடி நன்றாக வளரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News