வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!
கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டி – 2026.
அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா வரலாறு படைத்துள்ளார்!
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனும் அமெரிக்க வீரருமான ஃபேபியானோ கருவானாவை 15–13 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ.1.91 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
தன்னம்பிக்கை! திறமை! விடாமுயற்சி! வெற்றி!
இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்!
இந்தியாவின் பெருமை சாதனைகள் தொடரட்டும். மேலும் உயரட்டும்!
0
Leave a Reply