திருநர்களுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவியல்(AI and Robotics) தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், அழகாபுரியில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் திருநர்களுக்காக நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவியல்(AI and Robotics) தொழில்நுட்பப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (01.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருநர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களுக்கு சுயதொழில் மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இத்தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் 10 திருநர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இப்பயிற்சியில் பங்கேற்ற திருநர்களிடம் பயிற்சியின் மூலம் தங்களுக்கு கிடைக்கும் பயன்கள், கற்றுக்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சிக்குப் பின்னர் மேற்கொள்ள விரும்பும் சுயதொழில் நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.திருநர்களின் திறன்களை மேம்படுத்தி, சுய தொழில் புரிந்து பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கும், சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இப்பயிற்சியில் கலந்து கொண்ட திருநர்கள், தங்களுக்கு பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாங்கள் பயிற்சி பெற்று, வேலைவாய்ப்பை பெறுவதோடு, எங்களைப் போன்ற திருநர்களுக்கும் இந்த பயிற்சியை வழங்க முடியும். இதனால் எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். இந்த வாய்ப்பளித்ததற்கும், திருநர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின்போது, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.ம.சு.சரவணன், ஆவின் பொது மேலாளர் திருமதி தேவகி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், அரசு அலுவலர்கள், பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியில் பங்கேற்ற திருநர்கள் உடனிருந்தனர்.
0
Leave a Reply