25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் ஆய்வு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (01.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் விதமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகின்ற 15.09.2026 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 60 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 அரசு மருத்துவமனைகள், 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் 15.09.2026 அன்று முதல் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 குழந்தைகள் பிறக்கின்றன.அதன்படி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின்போது, தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள்,  தங்க மோதிரம் வைப்பறைகள், அதற்கான பாதுகாப்பு வசதிகள், நிகழ்ச்சி நடைபெறும் இடம், பயனாளிகள் அமர்வதற்கான ஏற்பாடுகள், வருகை தரும் பயனாளிகளுக்கு முறையாக வசதிகளை ஏற்படுத்தி தருதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.வே.யசோதாமணி, மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு  அலுவலர்கள் உடனிருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News