25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முல்தானிமட்டி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முல்தானிமட்டி.

முல்தானிமட்டி என்பது, சருமத்தை அழகுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொருள். இது, சருமத்தை சுத்தப்படுத்தவும், உலர்ந்த செல்களை நீக்கவும் - 'ஸ்கிரப்பிங்' எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் உதவுகிறது.

முல்தானிமட்டியில் உள்ள துத்த நாகம், சருமத்தில் பருக்களால் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் தன்மைக் கொண்டது. இதனுடன், தயிர், பன்னீர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து வீட்டிலேயே, 'பேஸ் பேக்'குகள் தயாரித்து பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், தோலின் நிறத்தையும், அழகையும் பாதுகாக்கலாம்.

முகத்தில் வரும் கரும்புள்ளி, வெண்புள்ளி போன்ற பிரச்னைகளுக்கு முல்தானிமட்டியுடன் வேப்ப இலையின் விழுதை கலந்து பூசி, காய்ந்ததும் முகத்தை கழுவவேண்டும். இவ்வாறுசெய்தால், முகத்தில்உள்ளகரும்புள்ளிகளும், வெண்புள்ளிகளும் நீங்கி, சருமம் பொலிவடையும்.

கோடைகாலத்தில் முல்தானிமட்டிபயன்படுத்தும்போது, சிலருக்குமுகத்தில்எரிச்சல் ஏற்படலாம்.அவர்கள்முல்தானிமட்டியுடன், துாய்மையான சந்தன தூளை கலந்து பூசினால், எரிச்சல் குறைந்து, குளிர்ச்சியாக இருக்கும்.வெளியே செல்வதற்கு முன், முகத்தில் முல்தானிமட்டியை பூசி, 15 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீரில் கழுவ முகம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

பூலான் கிழங்கு - 50 கிராம், கஸ்துாரி மஞ்சள் - 50 கிராம், கடலைப்பருப்பு -100 கிராம், பயத்தம் பருப்பு - 100 கிராம், வெள்ளரி விதை -100 கிராம், வெட்டிவேர் 25 கிராம்ஆகியவற்றைபொடியாகஅரைத்துவைத்து, தினமும் குளிக்கும்போதுபயன்படுத்தலாம்.வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குளியல் பவுடருடன், ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து, சருமம் பொலிவடையும்.

முகத்தில் பருக்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்சுரப்புபிரச்னைஉள்ளோர், பன்னீருடன், முல்தானிமட்டியைகுழைத்து, சிறிய பிரஷால் முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், விரைவில் இப்பிரச்னை தீரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News