25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'மைக்ரோகிரீன்' மற்றும் 'சூப்பர் புட் உணவு வகைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'மைக்ரோகிரீன்' மற்றும் 'சூப்பர் புட் உணவு வகைகள்

நெருப்பை கண்டறியும் முன் காடுகளில் கிடைத்த பழங்கள், கிழங்குகளை உண்டு உயிர் வாழ்ந்து வலிமையான உடலுடன் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது உலகின் பல நாடுகளிலும் மனிதர்கள் அதேபோன்ற ஒரு உணவுமுறைக்கு திரும்பி இருக்கின்றனர். இதனை 'மைக்ரோகிரீன்' மற்றும் 'சூப்பர் புட் என அழைக்கின்றனர்.

இதில் மைக்ரோகிரீன் என்பது பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் மூலிகை தாவரங்களின் விதைகளை முளைப்பு செய்த நிலையில் உருவாகும் மென்மையான உண்ணக்கூடிய கீரைகள் ஆகும். மைக்ரோ கிரீன் முறையில் முளைக்க வைக்கப்படும் கீரைகள் பெரும்பாலும் இருட்டில் தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட விதைகள் முளைப்பது மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. முளைத்து வரும் தளிர் இலைகள் உணவாக பயன்படுகிறது.

ஒரு விதை முளைக்கும் போது உருவாகும் தளிர் இலையில் ஏராளமான நார்ச்சத்து, அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நுண் சத்துக்கள் இருக்கின்றன. இதனை சமைக்காமல் பச்சையாக உண்ணும் போது இந்த சத்துக்கள் முழுமையாக உடலில் சேர்ந்து உடலை வலுப்படுத்துகிறது என கூறப்படுகிறது.

இதனால் தற்போது மைக்ரோ கிரீன் பயிர் வளர்ப்பு மிகவும் பிரபல மாகி வருகிறது., மைக்ரோ கிரீன் தளிர் உற்பத்திக்கு குறிப்பிட்ட வகை காய்கறிகள் தான் உதவுகின்றன. காய்கறி இனங்களில் முள்ளங்கி, காலிபிளவர், முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட், வெங்காயம் மற்றும் வெள்ளரி ஆகியவையும் அடங்கும்.

தானியங்களில் பார்லி, ஓட்ஸ், கோதுமை, சோளம் போன்றவையும், பயறுகளில் கொண்டைக்கடலை மற்றும் வெந்தயம் போன்றவையும் பயன்படுகின்றன.அதேவேளையில் தக்காளி, மிளகு, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு போன்ற சில காய்கறி, பயிர்கள் மைக்ரோ கிரீன்களை உற்பத்தி செய்ய ஏற்றவை அல்ல. இந்த மைக்ரோ கிரீன் முறை சிறிய இடத்தில் சத்தான, செலவில்லாத உணவு விளைவிக்கும் வேளாண்மை நுட்பமாக பரவி வருகிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News