25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வேளாண்மைத்துறை சார்பில் திருந்திய நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேளாண்மைத்துறை சார்பில் திருந்திய நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம்.

 வேளாண்மைத் துறை சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. போட்டியில் கலந்து கொண்டு மாநிலஅளவில் முதலிடம் பெறும் விவசாயிக்குரூ.5 இலட்சம் பரிசுத்தொகை மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கம் வழங்கப்படும்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளின்படி போட்டியில் கலந்துகொள்ளும் விவசாயிகள் குறைந்தப்பட்சம் 2 ஏக்கர் பரப்பில் திருந்திய நெல் சாகுபடி செய்தவராக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் இரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும்.

 நில உரிமைதாரர்கள் மற்றும் குத்தகைத்தாரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். 50 சென்ட் அளவில் பயிர் அறுவடை மேற்கொள்ளப்படும். மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் ரூ.150 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். ஓரு முறை பரிசு பெறும் விவசாயி அடுத்த 3 ஆண்டுகளுக்கு போட்டியில் கலந்து கொள்ள இயலாது.

 அறுவடை செய்யும் தேதியை 15 நாட்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநருக்;கு தெரிவிக்க வேண்டும். மாநில அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றியாளர்களை அறிவிப்பதில் சென்னை, வேளாண்மை இயக்குநர் தலைமையிலான, மாநில அளவிலான குழு இறுதிமுடிவு எடுக்கும்.எனவே விருதுநகர் மாவட்டத்தில், திருந்திய நெல் சாகுபடியில் ஆர்வம் உள்ள விவசாயிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு பயனடைய சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News