25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டத்தில் 2025-26-ம் நிதியாண்டிற்கான ரூ.19425.99 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டத்தில் 2025-26-ம் நிதியாண்டிற்கான ரூ.19425.99 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (20.02.2025) மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்    முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தின் 2025-26 ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்டம்   மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டதுநபார்டு வங்கி வருடந்தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்னுரிமை துறைகளுக்கு 2025-26ஆம் ஆண்டில், ரூபாய் 19425.99 கோடி அளவுக்கு வங்கிக் கடன் அளவிடப்பட்டுள்ளது.தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, விருதுநகர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் வரும் நிதியாண்டில் ரூபாய் 19425.99 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டில் வேளாண்மைக்கு ரூபாய் 9998.59 கோடியாகவும், நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூபாய் 7918.08 கோடியாகவும், பிற முன்னுரிமை துறைகளுக்கு (ஏற்றுமதி, கல்வி, வீடு சுட்டுதல் மற்றும் மீள்சக்தி) ரூபாய் 1509.32 கோடியாகவும்என மொத்தம் ரூ.19425.99 கோடி  அளவிற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.அதற்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வெளியிட்டார்இக்கூட்டத்தில் நபார்டு மாவட்ட மேலாளர் திரு. ராஜா சுரேஷ்வரன், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் திரு. பாண்டிசெல்வன்,  வங்கி மேலாளர்கள், அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News