இந்திய மருத்துவ சிகிச்சை குறித்து அமெரிக்க பெண்ணின் பதிவு வைரல்.
இந்தியாவில் தனது தாய்க்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் X தளத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் சுமார் 45,000 டாலர் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்ட சிகிச்சை, இந்தியாவில் முன்னணி மருத்துவமனையில் தங்குமிட வசதியுடன் வெறும் 4,500 டாலரில் முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் தென்கொரியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், மருத்துவரின் பரிந்துரையால் இந்தியா வந்ததாகவும், சிகிச்சையின் தரமும் மருத்துவமனையின் கவனிப்பும் சிறப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை மேலும் மேம்படுத்தினால், இந்தியாவின் மருத்துவ சுற்றுலா துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply