25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் முன்னிலையில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (27.10.2026) நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழையினால் பொதுமக்கள் பாதிப்படையாமல் பாதுகாத்திடவும், பருவ நிலை மாற்றம் காரணமாக நோய் தொற்று ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், மழை நீரினை நீர் நிலைகளில் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தினை உயத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.

மழைக்காலங்களில் கழிவுநீர் கால்வாய்களில் இருந்து வெளியேறும் மழைநீர் குடிநீர் இணைப்புகளில் கலந்து விடாமல் கண்காணித்திட வேண்டும். வரத்து வாய்க்கால்களை சுத்தம் செய்து மழைநீர் எளிதில் வெளியேறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழையின் காரணமாக மழை நீரினால் டெங்கு கொசு உற்பத்தியாகாமல் மழை நீரினை வெளியேற்றிட வேண்டும். கால்நடைகளுக்கு மழையின் காரணமாக நோய் தொற்று ஏற்படாமலும், சாலைகளில் திரியும் கால்நடைகளை தொழுவத்தில் கொண்டு வைத்து  பாதுகாத்திட வேண்டும். மழைநீரினை முறையாக சேமித்து குடிநீர் ஆதாரமாக பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.  

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களை எவ்வித் இயற்கை இடர்பாடுகளும் பாதித்திடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமும் மேற்கொண்டு மாவட்ட அளவில் பொறுப்பு அலுவலர்களை நியமித்து கண்காணித்திட உத்தரவிட்டுள்ளார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் மழையினை கண்காணித்திட 12 இடங்களில் மழை மானி நிலையங்களும், 43 இடங்களில் தானியங்கி மழை மானியங்களும், 11 இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்கள் மழையினால் பாதிப்படையும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. தகவல் பரிமாற்றத்திற்காக 1,540 நபர்கள் முதல் தகவல் அளிப்பதற்காகவும், 16 வாக்கி டாக்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறையின் கீழ் 8 கண்மாய்களும், 225 நீர்தேக்கங்களும், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 712 கண்மாய்களும் உள்ளன. மழை நீர் உடைப்பு ஏற்படாமல் தடுத்திட பொதுப்பணித்துறையின் மூலம் 4,850 மணல் மூட்டைகளும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 19,000 மணல் மூட்டைகள் என மொத்தம் 23,850 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குடிநீரில் குளோரின் கலந்து வழங்குவதற்காக 3,500 மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.மழையினால் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்திட 17 பள்ளிகள், 2 அங்கன்வாடி மையங்கள், 6 திருமண மண்டபம், 12 சமுதாயக்கூடம், 2 இ-சேவை மையக்கட்டடங்கள் என 39 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழை காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாக 4,200 மின்கம்பங்களும், 218 மின்மாற்றிகளும், 140 கி.மீ நீளத்திற்கு மின்கம்பி வடங்களும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்களை நோய்தொற்றிலிருந்து பாதுகாத்திட 3 அரசு தலைமை மருத்துவமனைகள், 15 வட்டார தலைமை மருத்துவமனைகள், 53 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 39 துணை சுகாதார நிலையம், 7 நகர்புற சுகாதார நிலையங்களில் சிகிச்சை வழங்கிட தயார் நிலையில் சிகிச்சை வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.பயிர் சேதத்தினை கண்டறிந்து உரிய இழப்பீடு தரும் பொருட்டு 156 அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பு 1,27,693 ஹெக்டர் நிலங்களில் தற்போது 51,660 ஹெக்டர் நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 11,37,671 கால்நடைகளை பாதுகாத்திட 86 கால்நடை அரசு மருத்துவர்கள் மூலம் 198 சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட திட்டமிடப்பட்டு 107 முகாம்கள் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள முகாம்கள் நடைபெற்று வருகிறது.மழைநீரினை நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் அகற்றிட 25 மின் மோட்டார்களும், 30 நீரை வெளியேற்றும் பம்புகளும், 16 ஜெனரேட்டர்களும், 22 மரம் அறுக்கும் கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் சீரான உணவு பொருட்கள் வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் 17,701 மெ.டன் அரிசியும், 475 மெ.டன் பருப்பும், 2,33,894 லிட்டர் பாமாயிலும், 730 மெ.டன் சீனியும், 683 மெ.டன் கோதுமையும் தயார் நிலையில் உள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் இயற்கை இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட 5 இரப்பர் படகுகள், 142 உயிர் காக்கும் உடையும், 55 டார்ச்லைட்டும், 130 தனிநபர் உயிர் காக்கும் உபகரணங்களும், 20 மரம் அறுக்கும் கருவிகளும் மற்றும் தானியங்கி இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலர்களும் வடகிழக்கு பருவமழையின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு, தீயணைப்பு மற்றும் மீட்பு துறைகள் சார்பில் நடைபெற்ற பேரிடர் மீட்பு ஒத்திகையினை  அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்கள்.நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கா.வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சோமசுந்தர சீனிவாசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News