25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது தமிழக அணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது தமிழக அணி.

தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 41-வது சீசன் சென்னையில் நடைபெற்றது. இதில் 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

நேற்று நடைபெற்ற 5-வது மற்றும் இறுதி நாளில், பெண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்டோர் 'டிரிபிள் ஜம்ப்' பிரிவில் தமிழகத்தின் சாதனா ரவி (13.22 மீ) தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தமிழக வீரர் தரணிதரன் 76.18 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.

போட்டிகளின் முடிவில் ஒட்டுமொத்தமாக 19 தங்கம், 12 வெள்ளி, 15 வெண்கலப் பதக்கங்களை வென்ற தமிழக அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஹரியானா (15+12+13), கர்நாடக (12+9+4) அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. மேலும், 20 வயது பிரிவில் சிறந்த வீரராக அம்ப்ரிஸும், சிறந்த வீராங்கனையாக அபிநயாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News