25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.0 கோடி வரை மானியத்துடன் கடனுதவி பெறும் திட்டத்தினை  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.0 கோடி வரை மானியத்துடன் கடனுதவி பெறும் திட்டத்தினை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார்.

பெண் தொழில் முனைவோர்களால் தொடங்கப்படும் தனியுரிமை நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனங்கள், ஒரு நபர் நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் பெண் தொழில் முனைவோர் நிறுவனத்தின்யுரிமை அல்லது பங்குகளில் குறைந்தபட்சம் 51% பங்குடன் நிர்வாகக் கட்டுப்பாடு உள்ள நிறுவனங்களை தொடங்கிட வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.10 இலட்சமும் அதிகபட்சம் ரூ.5.0 கோடி வரை கடனுதவி வழங்கப்படும். முதல் முறையாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு உற்பத்தி அல்லது சேவை தொழில் தொடங்குவதற்கான திட்டமிடுதல் தொடர்பாக 15 நாட்கள் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் பயிற்சி வழங்கப்படும்.

தொழில் திட்டத்தின் மொத்த செலவில் தொழில் முனைவோர் தங்களது பங்காக புதிய தொழில் நிறுவனங்களுக்கு 20 சதவீதமும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் 15 சதவீதமும் செலுத்த வேண்டும். மகளிர் தொழில் முனைவோர்களுக்கு 25 சதவீதம் மானியமும், முதல் முறை தொழில் தொடங்கும் மகளிருக்கு 30 சதவீதமும், ரூ. 1.0 கோடி மதிப்பிற்கு கீழ் இயந்திரம் வாங்கும் தொழில் முனைவோர்களுக்கு 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படவுள்ளது.

விருதுநகர் தொழில் சார்ந்த மாவட்டம் என்பதால் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமையும். எனவே இத்திட்டத்தினை  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் வருகின்ற 29.10.2026 அன்று மாலை 4 மணி அளவில் சிவகாசி ICAI பவன், வேலாயுதம் சாலை, சிவகாசியில்  தொடங்கி வைக்கவுள்ளார். தொழில் முனைவோர்களாக ஆர்வமுள்ள விருப்பமுள்ள மகளிர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News