450 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினமான 01-11-2026 அன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினமான 01.11.2026 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் (01.04.2026 முதல் 31.10.2026 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், ஊரப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், தமிழ்நாடு கிராம மேம்பாடு மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு, குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறையைத் தடுத்தல், தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் -பல்லுயிர் மேலாண்மைக்குழு குறித்தும், இழிவு தரும் சாதிப்பெயர்களை மாற்றம் செய்தல், வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்துதல், சபாசார் வலைத்தளம் உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம் குறிப்பு(2026), தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கிராம சபா கூட்டப்பொருள் மற்றும் இதர கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
எனவே, 01.11.2026 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply