25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திருவில்லிபுத்தூரில் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவில்லிபுத்தூரில் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.

 தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 23.09.2025 அன்று விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.5.31 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (24.10.2025) குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.பின்னர், புதிய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மேலும், 12 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், 9 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்திவருகிறார்கள்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதித்திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருவில்லிபுத்தூரில் ரூ.5.31 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டட தரைத்தளத்தில், வட்டாட்சியர் அலுவலக அறை, பொது பிரிவு அலுவலர் அறை, தேர்தல் அறை, சமூக பாதுகாப்பு திட்ட அறை, வட்ட வழங்கல்  பிரிவு அலுவலர் அறை,  ஆதி திராவிடர்  நல தனி வட்டாட்சியர் அலுவலக அறை, இ-சேவை மைய அறை, பதிவு அறை, கூட்டரங்கம், ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுகாதார வளாகம்,முதல் தளத்தில், இரண்டு பதிவு அறைகள், நில அளவைப்பிரிவு, மினி கூட்டரங்கு, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மொத்தம் சுமார் 13,351 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., திருவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.தங்கம் ரவிக்கண்ணன், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் திரு.பாலமுருகன், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News