25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நகர்ப்புற  உள்ளாட்சிகளில் தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு 31.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு 31.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .

விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்தலில் போட்டியிடமால் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு 31.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் 650 பேர் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12 ஆயிரத்து 913 பேர் கிராம ஊராட்சி ஒன்றியங்களிலும், 388 பேர் ஊராட்சி ஒன்றியங்களிலும், 37 பேர் மாவட்ட ஊராட்சிகளிலும் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மாநகராட்சி / நகராட்சி/ பேரூராட்சி ஆகியவற்றிற்கான வார்டு உறுப்பினர் பதவிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமண உறுப்பினர்களாக நியமிப்பதற்கான விண்ணப்பங்களை https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சிக்கு https://.tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in  என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

       எனவே, தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இது நாள் வரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வசித்து வரும் பேரூராட்சி எல்லைக்குள் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல்அலுவலரிடமும், நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் வருகிற 31.07.2025 அன்று மாலை 3.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News