25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள். 7th FEBRUARY
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள். 7th FEBRUARY

பீச் வாலிபால், 

உத்தரகாண்ட்டில், தேசிய விளையாட்டு 38வது சீசன் பீச் வாலிபால் போட்டியில் தமிழக பெண்கள் அணி தங்கம் வென்றது. பெண்களுக்கான பீச் வாலிபால் பைனலில் தமிழகம், புதுச்சேரி அணிகள் மோதி, (21-15, 21-11) கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றது. ஆண்களுக்கான பீச் வாலிபால் பைனலில் தமிழ கம், ஆந்திரா அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய தமிழக அணி (23-25, 19-21) என்ற கணக்கில் தோல்விய டைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆந்திராவுக்கு தங்கம் கிடைத்தது. 

டென்னிஸ் 

சென்னையில், ஏ.டி. பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி, ரஷ் யாவின் அகாபோனோவ், எவ்ஜெனி டியுர்னெவ் ஜோடியை எதிர்கொண் டது. அபாரமாக ஆடிய ராம்குமார், மைனேனி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரஷாந்த் ஜோடி, ஜிம்பாப்வேயின் கோர்ட்னி ஜான் லாக், ஜப்பானின் ரியோ நோகுச்சி ஜோடியை சந்தித்தது. இதில் ஜீவன், விஜய் சுந்தர் ஜோடி 6-2, 6-2 என வெற்றிபெற்றுஅரையிறுதிக்கு முன்னேறியது.  

துப்பாக்கி சுடுதல் 

ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., 'ரைபிள் -3' பிரிவு தகுதிச்சுற்றில் மத்திய பிரதேசத்தின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (598.45 புள்ளி) முதலிடம் பிடித்தார். சர்வீசஸ் அணியின் நிராஜ் குமார் (591.33 புள்ளி) 3வது இடம் பிடித்தார். பைனலில் நிராஜ் குமார், 464.1 புள்ளி களுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

மத்திய பிரதேசத்தின் ஐஸ்வரி பிரதாப் சிங் (462.4 புள்ளி), மகாராஷ் டிராவின் சுவப்னில் சுரேஷ் குசாலே (447.7) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.

10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகளுக்கான பைனலில் ஹரியானா, ராஜஸ்தான் அணிகள் மோதின.பிரமோத், சுருச்சி அடங்கிய ஹரியானா அணி 17-7 என வெற்றி பெற்று தங்கம் வென்றது.

வில்வித்தை  

ஜார்க் கண்ட் அணியின் தீபிகா குமாரி, பெண்களுக்கான வில்வித்தை தனி நபர் 'ரீகர்வ்' பிரிவு தகுதிச்சுற்றில், 674 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். காலிறுதியில் பஞ்சாப்பின் சிம்ரன்ஜீத் கவுர், அரையிறுதியில் மகாராஷ்டிரா வின் கதா கடகேவை வீழ்த்திய தீபிகா, பைனலில் பீகாரின் அன்ஷிகா குமாரியை வீழ்த்தி தங்கம் வென்றார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News