பாரா ஆசிய விளையாட்டு போட்டி
தடகளப் போட்டி
ஆண்களுக்கான 400 மீ. ஓட்டப் பந்தயத்தில் (T64), பந்தய இலக்கை 52.28 வினாடிகளில் கடந்து இந்தியாவின் சந்தீப் உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரரான அஜய் குமார் (53.61 வினாடி) வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஈட்டி எறிதல் போட்டி
ஆண்கள் பிரிவு (F37/38): இந்தியாவின் ஹனி அதிகபட்சமாக 60.49 மீ. தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
ஆண்கள் பிரிவு (F42-44/F61-64): இந்தியாவின் சுமித் அன்டில் 72.46 மீ. தூரம் எறிந்து தங்கம் வென்றார். இப்போட்டியில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்களான மஹேந்திரா குர்ஜார் (59.03 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும், சந்திப் சஞ்சய் சர்கார் (64.48 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
நீளம் தாண்டுதல் & ஓட்டப்பந்தயம்
பெண்கள் நீளம் தாண்டுதல் (T47): இந்தியாவின் நிமிஷா 5.37 மீ. தூரம் தாண்டி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆண்கள் 1500 மீ. ஓட்டம் (T46): இந்தியாவின் பிரமோத், இலக்கை 4 நிமிடம் 09.65 வினாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வில்வித்தை போட்டி
ஆண்கள் இரட்டையர் (ரிகர்வ் பிரிவு): இந்தியாவின் ஹர்விந்தர் சிங் - விஜய் சண்டி ஜோடி 5-1 என்ற கணக்கில் சீனாவின் டுயோ யுன் - லிக்யு ஜாவோ ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.
பெண்கள் இரட்டையர் பிரிவு: இந்தியாவின் பாவ்னா சவுத்ரி - பூஜா ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
0
Leave a Reply