25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்  அவர்கள் ஆகியோர் புதிய நகரப்பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் புதிய நகரப்பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தனர்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் 19 புதிய நகரப்பேருந்து சேவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு (23.10.2026) தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.

பொதுமக்களின் போக்குவரத்து வசதியினை மேம்படுத்திடவும், பாதுகாப்பான போக்குவரத்தினை உறுதி செய்திடவும் அதிக முன்னுரிமை எடுத்து விபத்தில்லா தமிழகம் என்ற நிலையினை எய்திட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கிராம பொதுமக்கள் பணியின் காரணமாக நகரங்களுக்கும், நகரங்களை கிராமங்களோடு இணைப்பதற்கும் பொது போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகள் இன்றியமையாததாக உள்ளது.கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக அருகிலுள்ள நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்று விருதுநகர் கிளையிலிருந்து விருதுநகர் -சிவகாசி/திருமங்கலம், விருதுநகர் – சிவகாசி/அருப்புக்கோட்டை, விருதுநகர் – சிவகாசி/திருமங்கலம், விருதுநகர்-சாத்தூர்/திருமங்கலம், விருதுநகர்-சாத்தூர்/திருமங்கலம் ஆகிய வழித்தடங்களுக்கு 5 பேருந்துகளும்,  அருப்புக்கோட்டை கிளையிலிருந்து அருப்புக்கோட்டை-விருதுநகர், அருப்புக்கோட்டை-விருதுநகர், அருப்புக்கோட்டை-விருதுநகர்/சாத்தூர், அருப்புக்கோட்டை – நரிக்குடி ஆகிய வழித்தடங்களுக்கு 4 பேருந்துகளும்,  சாத்தூர் கிளையிலிருந்து சாத்தூர்-சிவகாசி/திருத்தங்கல் வழித்தடத்திற்கு 1 பேருந்தும், சிவகாசி கிளையிலிருந்து சிவகாசி-விருதுநகர், சிவகாசி-திருவில்லிபுத்தூர்,  சிவகாசி-திருவேங்கடம் ஆகிய வழித்தடங்களுக்கு 3 பேருந்துகளும்,  திருவில்லிபுத்தூர் கிளையிலிருந்து திருவில்லிபுத்தூர்-சிவகாசி, திருவில்லிபுத்தூர்-சிவகாசி ஆகிய வழித்தடங்களுக்கு 2 பேருந்துகளும், இராஜபாளையம் கிளையிலிருந்து இராஜபாளையம்-சங்கரண்கோவில் வழித்தடத்திற்கு 1 பேருந்தும், காரியாபட்டி கிளையிலிருந்து காரியாபட்டி- பெரியார், காரியாபட்டி-பெரியார்-கம்பிக்குளம், காரியாபட்டி-பெரியார் ஆகிய வழித்தடங்களுக்கு 3 பேருந்துகளும் என ஆக மொத்தம் 19 புதிய நகரப்பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும், பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்த பேருந்து சேவை பெரிதும் பயனளிக்கும். மாணவர்கள் உரிய நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லவும், பணியாளர்கள் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும் இந்த பேருந்து சேவை உதவிகரமாக அமையும்.

எனவே, பொதுமக்கள் இப்பேருந்து வசதியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தெரிவித்தனர்.நிகழ்வில், விருதுநகர் மண்டல பொது மேலாளர் திரு.கண்ணன், உதவி மேலாளர் (வணிகம்) திரு.நாகராஜ், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News