25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் கனமழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மரணமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 இலட்சத்திற்கான நிவாரணத்தொகை ஆணையினை வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் கனமழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மரணமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 இலட்சத்திற்கான நிவாரணத்தொகை ஆணையினை வழங்கினார்.

  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் மேட்டமலை கிராமத்தில் கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மரணமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 இலட்சத்திற்கான நிவாரணத்தொகை ஆணையினை (23.10.2026) வழங்கினார்.

சாத்தூர் வட்டம் மேட்டமலை கிராமத்தில் திரு.செல்வம் என்பவரின் வீட்டில் அவர், அவரது மனைவி திருமதி சோலையம்மாள், மகன் செல்வன் ஆதிராஜ், மகள் செல்வி முத்துசெல்வி என மொத்தம் 4 நபர்கள் வசித்து வந்தனர். கடந்த 22.10.2026 அன்று சாத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அவரது மகள் செல்வி முத்துசெல்வி(16) என்பவர் மரணமடைந்தார். அவரது மனைவி சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் சிகிச்சை பெற்று வரும் மரணமடைந்த செல்வியின் தாயார் திருமதி சோலையம்மாள், தந்தை  மற்றும் சகோதரர் ஆகியோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், அவர்களது குடும்பத்திற்கு பேரிடர் நிவாரணத்தொகை ரூ.4 இலட்சத்திற்கான ஆணையினையும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில் அரசு மருத்துவர்கள், அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News