27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேமராவில் சிக்கிய அரிய உயிரினம்! விஞ்ஞானிகள் வியப்பு.
சிக்கிமின் அடர்ந்த காட்டுப் பகுதியில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை மிஷ்மி டாகின் (Mishmi Takin) உயிரினம் கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரோந்துப் பணியின்போது பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான இந்த உயிரினம், ஆடு மற்றும் மான் ஆகியவற்றின் தோற்றத்தை ஒத்த தனித்துவமான உடலமைப்பைக் கொண்டது.
அரிய வனவிலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் மிஷ்மி டாகின், இமயமலைப் பகுதிகளின் உயிரியல் பன்முகத்தன்மையில் முக்கிய இடம் பெறுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு, அரிய உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், வனப்பகுதிகளில் தொடர்ச்சியான கண்காணிப்பின் முக்கியத்துவத்தையும் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது
0
Leave a Reply