25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பன்னீர் மசாலா கிரேவி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பன்னீர் மசாலா கிரேவி

தேவையான பொருட்கள்:பன்னீர் 200 கிராம்,நறுக்கிய வெங்காயம் 2,நறுக்கிய தக்காளி 2, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி,

தனியா  தூள் : 2 தேக்கரண்டி,மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,கரமசாலா தூள் 1 தேக்கரண்டி,

இஞ்சி பூண்டு பேஸ்ட்2தேக்கரண்டி,எண்ணெய் தேவையான அளவு,உப்பு தேவையான அளவு

பால் ஆடை 1 தேக்கரண்டி,ஏலக்காய்-2,பட்டை-சிறிதளவு,கிராம்பு – சிறிதளவு,கருவேப்பிலை- சிறிதளவு

பன்னீர் மசாலா கிரேவி செய்முறை-எடுத்து வைத்துள்ள பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு எடுத்து வைத்துள்ள மசாலா பொடி, மற்றும் சிறிதளவு உப்பு இவை அனைத்தையும் பன்னீருடன் சேர்த்து ஒரு 5 நிமிடம் கலந்து வைக்க வேண்டும்.அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைய்யுங்கள். அந்த பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள பன்னீர் மசாலா பொருட்களை அதில் போட்டு ,வதக்கி தனியாக வைத்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக அடுப்பில் மற்றொரு பாத்திரம் வைத்து அந்த பாத்திரம் காய்ந்த உடன் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கி சிறிது நேரம் அதை ஆற வைத்து விடுங்கள். அதன் பிறகு வதக்கி வைத்துள்ள பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து விடுங்கள்.

கடைசியாக அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி எடுத்து வைத்துள்ள கிராம்பு, பட்டை, ஏலக்காய், பால் ஆடை, சிறிதளவு உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக5 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.5 நிமிடம் கழித்த பிறகு வதக்கி வைத்துள்ள பன்னீர் மசாலா பொருள், மிக்சி ஜாரில் அரைத்த பேஸ்ட் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் அடுப்பில் கொதிக்க விடுங்கள். மசாலா பொருட்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்தவுடன் கருவேப்பிலை, கொத்தமல்லி தூவி விட்டு கிரேவியை அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.அவ்வளவு தான் நீங்கள் எதிர்பார்த்த சுவையான பன்னீர் மசாலா கிரேவி தயார். இந்த கிரேவியை சப்பாத்தி இட்லி, தோசை, பரோட்டா அனைத்திற்கும் சைடிஷாக சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News