25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேசிய நெடுஞ்சாலை எண். 744 வடுகபட்டி - தெற்குவெங்காநல்லூர் நான்கு வழிச்சாலைக்கு நில இழப்பீடு பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய நெடுஞ்சாலை எண். 744 வடுகபட்டி - தெற்குவெங்காநல்லூர் நான்கு வழிச்சாலைக்கு நில இழப்பீடு பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டம், வத்திராயிருப்பு வட்டம், சிவகாசி வட்டம் மற்றும் இராஜபாளையம் வட்டங்களில் வடுகபட்டி முதல் தெற்கு வெங்காநல்லூர் நான்கு வழிச்சாலை திட்டம் பணிக்காக அந்த பாதையில் உள்ள தனி நபர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. திருமங்கலம் - செங்கோட்டை வரை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் இந்தப் பாதையில் நான்கு வழிச்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது.இதில், பெரும்பாலானோருக்கு நிலத்திற்கான இழப்பீடுத்தொகை தேசிய நெடுஞ்சாலைத் துறையால் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

இருப்பினும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் அச்சம்தவிர்த்தான், அத்திகுளம் செங்குளம், அயன்நாச்சியார்கோவில், தெய்வேந்திரி, முத்துவெங்கட்ராயபுரம், நலிங்கப்பேரி, பாட்டாகுளம் சல்லிபட்டி, பிள்ளையார்குளம், பூவாணி, திருவில்லிபுத்தூர், விழுப்பனூர், தைலாகுளம் மற்றும் வடுகபட்டி,வத்திராயிருப்பு வட்டத்தில் களத்தூர், குன்னூர், எஸ்.அம்மாபட்டி, நத்தம்பட்டி மற்றும் மூவரை வென்றான்,இராஜபாளையம் வட்டத்தில் ரகுநாதபுரம், மேலராஜகுலராமன், சமுசிகாபுரம், தெற்கு வெங்காநல்லூர், கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், புத்தூர் மற்றும் மேலூர்துரைசாமிபுரம்,சிவகாசி வட்டத்தில் செவலூர், மங்களம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நிலங்களுக்கான இழப்பீடுத்தொகையை பெறாதவர்கள் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்புக்கான தனி வட்டாட்சியர் (நி.எ) திருவில்லிபுத்தூர் மற்றும் தனி வட்டாட்சியர் (நி.எ) இராஜபாளையம் அலுவலகத்திலோ (அல்லது) விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக (பழைய கட்டிடம்) வளாகத்தில் செயல்படும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இழப்பீட்டுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் (விடுமுறை நாட்களை தவிர பிற அலுவலக வேலை நாட்களில்) என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News