25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பள்ளியறை பூஜை தரிசனம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பள்ளியறை பூஜை தரிசனம்

சிவாலயங்களில் தினசரியும் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை பள்ளியறை பூஜை. சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறையில் ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப் பாடி பூஜை செய்வார்கள். இந்த பள்ளியறை பூஜையை தரிசனம் செய்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பலன்கள் கிடைக்கும்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கப் போகிறார். இந்த பூஜையில் பங்கேற்று அம்மனையும் சுவாமியையும் தரிசனம் செய்தால் பல்வேறு சிறப்புகள் தேடி வரும். சிவன் சக்தி ஐக்கியத்தை உணர்த்தும் இந்த பள்ளியறை பூஜையை தம்பதிசமேதராககாண்பவர்களின்குடும்பங்களில்ஒற்றுமைஅதிகரிக்கும்.எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்போல பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு அர்த்த ஜாமத்தில் மல்லிகை பூவால் கூடாரம் அமைத்து வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.

இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரின் வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்த பின் அன்னைக்கு விசேஷ ஆரத்தி அதாவது மூக்குத்தி தீபாராதனை நடக்கிறது. உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை. எனவேதான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க முடியும். அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவார்கள். அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம். மீனாட்சியின் மாணிக்க மூக்குத்தியை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டு விடும்.


மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார்.அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டாத காட்சியாகும் பள்ளியறை பூஜை சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம். கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தால் நல்ல பயனைக் கொடுக்கும் என்பதும் மீனாட்சி கோவிலில் மறைந்துள்ள பள்ளியறை பூஜை தரிசன ரகசியமாகும்.

 பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் சிவன் நகர்வலம் வரும் போது சிவபுராணம் படிக்க வேண்டும். பள்ளியறை பூஜையை தினம் தினம் தரிசனம் செய்தாலே வளமான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி சுமக்கும் பாக்கியம் பெற்றவர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதிகளாக மாறுவார்கள். பள்ளியறை பூஜையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வேலை அல்லது தொழில் செய்து வருபவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையை தரிசித்து வருவதன் மூலமாக வேலையில் இருந்த பிரச்சினைகள் விலகிவிடும். தொழிலில் படிப்படியான வளர்ச்சியைக் காணலாம். பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கொடுப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பள்ளியறை பூஜைக்கு நெய், நல்லெண்ணெய் கொடுப்பவர்களுக்கு கண் பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை. பள்ளியறை பூஜையிலும், அதன் நிறைவுப் பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியை அடைவர். பல மடங்கு லாபம் அவர்களைத் தேடி வரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News