25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சாம்பியன்ஸ் டிராபி  அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங் களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இந் தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 

பாகிஸ் தான் 33.1 ஓவரில் 151/2 என வலுவாக இருந்தது. அப் போது 300 ரன் எட்ட வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்திய பவுலர்கள் பிடியை இறுக்க, 34.5 ஓவரில் 165/5 ரன் என சரிந்தது. சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் சூப்பர் துவக்கம் தந்தனர். நசீம் ஷா ஓவரில் ரோகித் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார்.   பின் கோலி, ஸ்ரேயாஸ் அபாரமாக ஆடினர். சல்மான் பந்தில் ஸ்ரேயாஸ் ஒரு இமா லய சிக்சர் (102 மீ., துாரம்) சிக்சர் விளாசினார். அரைச தம் கடந்த ஸ்ரேயாஸ், 56 ரன்னுக்கு குஷ்தில் பந்தில் இமாம் - உல்- ஹக்கின் சர்ச் சைக்குரிய 'கேட்ச்சில்' வெளி யேறினார். 42 ஓவரில் இந்தியா 238/4 ரன் எடுத்திருந்தது. அப்போது கோலி 95 ரன்னில் இருந்தார். 

வெற்றிக்கு 4 ரன், கோலி சதத்திற்கு 5 ரன் தேவை என்ற நிலை ஏற்பட்டது. குஷ்தில் வீசிய அடுத்த ஓவ ரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்த கோலி 96 ரன்னை எட்டினார். அடுத்த பந்தில் அக்சர் ஒரு ரன் எடுத்தார்.3வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்த கோலி, ஒருநாள் அரங்கில் 51வது சதம் எட்டினார். இந்திய அணி 42.3 ஓவரில் 244/4 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய இந்தியாவின் விராத் கோலி, ஒரு நாள் போட்டி அரங்கில் தனது 51வது சதத்தை பதிவு செய்தார். அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் (49 சதம்) உள்ளார்.இது கோலியின், 82வது சர்வதேச சதம் (டெஸ்ட்-30, ஒருநாள் -51, 'டி-20'-1) ஆனது. 

ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3வது வெற் றியை பதிவு செய்தது. இரு அணிகளும் 6 முறை மோதிய போட்டியில் இந்தியா 3 (2013, 2017, 2025), பாகிஸ்தான் 3ல் (2004, 2009, 2017) வெற்றி பெற்றன.

பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் கூறுகையில், "கோலி 'பார்ம்' இல்லாமல் தவிப்பதாக உலகமே விமர்சித்தது. ஆனால், முக்கிய போட்டியில் அனாயசமாக சதம் விளாசி, ஆட்ட நாயகனாக முத்திரை பதித்தார். இவரது சிறப்பான உடற்தகுதி, கடின உழைப்பை பாராட்டுகிறேன்," என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News