25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேனடையில் தான் தேனீக்கள், தேனை சேமித்து வைக்கும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேனடையில் தான் தேனீக்கள், தேனை சேமித்து வைக்கும்.

தேனடையில் தான் தேனீக்கள், மகரந்தம் மற்றும் தேனை சேமித்து வைக்கும். இதுமெழுகுபோன்றுஅமைந்திருக்கும், வணிகரீதியாக விற்பனை செய்யப்படும் தேன், பல்வேறு நிலைகளில் சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. ஆனால், தேனடை இயற்கையானது.

தேனடையில் இருக்கும் தேனில் தேனீக்கள் சேகரித்த மகரந்தம், புரோபோலிஸ் மற்றும் ராயல் ஜெல்லி என்ற மெழுகு இருக்கும். இதனால், தனி தேனை விட மகரந்தம், ராயல் ஜெல்லி மெழுகு அடங்கிய தேனில் மருத்துவ குணங்கள் அதிகம் என்று நம்பப்படுகிறது. தேன் கூட்டில் செறிந்து கிடக்கும் தேனில் புரதங்கள், தாதுக்கள்,நீர்,மகரந்தம், பிரக்டோஸ், குளுக்கோஸ், கரிம அமிலங்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவை தாராளமாக உள் ளன. இவற்றை உண்ணும்போது மனித உடல் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நச்சு உயிரிகளை எதிர்த்து போராடும் வலிமையை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

தும்மல், சளி மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாக தேனடையை நம் முன்னோர்கள் மென்று சாப்பிட்டு உள்ளனர். இதில் காணப்படும் கொலாஜன்கள் உள்பட பல் வேறு பொருட்கள் தோல் சுருக்கத்தை தடுக்கின்றன. குடல் நுண்ணுயிரிகளை மீண்டும் உருவாக்கி உணவு செரிமானத்தில் பங்களித்து உண்ட உணவின் சத்துகள் தகுந்த முறையில் உடலுக்கு கிடைக்க உதவுகிறது. தைராய்டு உள்பட அனைத்து ஹார்மோன் சுரப்பை நிலைப்படுத்துகிறது. மேலும், கல்லீரலில் நச்சுகளை நீக்கி கல்லீரல் நன்கு செயல்பட உதவுகிறது. எனவே தேனடையை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என டாக் டர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளில் கருத்தரித்தல் மருத்துவத்தில் தேனடை முக்கிய ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக் கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News