25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கிராண்ட் பிரிக்ஸ் தடகளபோட்டி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிராண்ட் பிரிக்ஸ் தடகளபோட்டி.

கிராண்ட் பிரிக்ஸ் தடகளபோட்டி ஹங்கேரியில், ஆண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் ஒலிம்பிக்கில் இரண்டு முறை(2020,2024) தங்கம் வென்ற சுவீடனின் டுப்ளான்டிஸ் 25,பங்கேற்றார். கடந்த ஜூன்மாதம் சொந்தமண்ணில் நடந்த போட்டியில் 6.28 மீ., உயரம் தாவி உலகசாதனை படைத்திருந்தார். 

நேற்று பைனலில் பங்கேற்ற டுப்ளான்டிஸ், அதி கபட்சமாக 6.29 மீ., உயரம் தாவி,13வதுமுறையாக தனது சொந்த உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்து புதிய உலக சாதனை படைத்தார்..

ஆண்களுக்கான 3000மீ., ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் பங்கேற்று,7 நிமிடம்,34.49 வினாடியில் வந்து 5வது இடம் பிடித்து, தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடந்த போட்டியில் இவர், 7 நிமிடம், 38.26 வினாடியில் கடந்து தேசிய சாதனை படைத்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News