25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நாட்டுக்கோழி இறைச்சி நோய் தீர்க்கும் உணவு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாட்டுக்கோழி இறைச்சி நோய் தீர்க்கும் உணவு .

அளவில் சிறியது  நாட்டுக் கோழிகள் .பிராய்லர் கோழிகளை விட நாட்டுக் கோழிகள் அதிக திறன் கொண்டவை. மண்ணில் காணப்படும் தானியங்கள், தாவரங்கள், மூலிகைகள், பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை மேய்ந்து வளர்கின்றன. இதனால், இவற்றின் இறைச்சி பல்வேறு சத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது.

நாட்டுக்கோழி இறைச்சியில் காணப்படும் புரதம் மனித உடலில் திசுக்களை உரு வாக்குவதற்கும், அவற்றில் கோளாறு இருந்தால் சரிசெய்வதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நொதிகள் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் உத வுவதாக கூறுகிறார்கள்.

நாட்டுக்கோழி இறைச்சியில் வைட்டமின் ஏ.பி. பாஸ்பரஸ், கால்சியம், மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளன. செலினியம் தாது ,கீழ்வாத நோயை தடுப்பதில் சிறப்பானது. பார்வை மங்கல் பாதிப்புகளை வைட்டமின் ஏ சத்து குறைக்கிறது. நாட்டுக்கோழி இறைச்சியில் உள்ள வைட்டமின் டி சத்து ,இதய நோய்களை தடுக்க உதவுகிறது. தோல் நோய்களைத் தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் பி உதவுகிறது.

உலகம் முழுவதும் அந்தந்த இடங்களில் உள்ள நாட்டுக் கோழிகள் ஆர்கானிக் கோழிகள் என்றே அழைக்கப்படுகின்றன. நோய் தீர்க்கும் உணவு களில் ஒன்றாக கருதப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News