25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பூ, பூக்காத,  மல்லிகை செடி கூட   செழிப்பாக பூத்துக் குலுங்க  .....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூ, பூக்காத, மல்லிகை செடி கூட   செழிப்பாக பூத்துக் குலுங்க  .....

நம் வீட்டில் வளர்க்கும் பூச்செடிகளாக இருந்தாலும், காய்கறி செடிகளாக இருந்தாலும், பழச்செடிகளாக இருந்தாலும் சரி, பூத்து, காய்த்து, கனிந்து, குலுங்கினால் தான் அந்த செடிகளுக்கு அழகு. பூக்காமல், காய்க்காமல், செழிப்பாக வளர்ந்தாலும், அந்த செடிகளைப் பார்க்கும்போது நமக்கு சின்ன மன வருத்தம் இருக்கத்தான் செய்யும். அந்த வரிசையில் உங்கள் வீட்டில் இருக்கும் மல்லிகைப் பூ செடி சீசனில் கூட பூக்கவில்லையா? முதலில் மல்லிகை பூச்செடியானது நிழலில் இருக்கக்கூடாது. நன்றாக வெயில் படும் இடத்தில் இருந்தால், அதில் அதிகப்படியான பூப்பூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் பால்கனியில் மல்லிகை பூ செடி தொட்டி இருந்தாலும், அந்தச் செடி சிறிது நேரம், சூரிய வெளிச்சத்தில் நேரடியாக கட்டாயம் இருக்க வேண்டும். காலையில் அல்லது மாலையில் இந்த இரண்டு வேலைகளில் ஒருமுறையாவது உங்கள் செடியை, வெயிலில் வைக்க வேண்டும்.

இரண்டாவதாக, மல்லிகை பூச்செடியாக இருந்தாலும், ரோஜா பூச்செடியாக இருந்தாலும், பூக்களே பூக்காமல் சில கிளைகள் நீண்டு வளர ஆரம்பிக்கும். குறிப்பாக ரோஜா செடிகளில் ஏழு இலைகள்  கொண்ட கிளைகள் இப்படி வளர்வது வழக்கம். அதை எல்லாம் விட்டு விடுவோம் அல்லவா? அதேபோல் மல்லிகைப் பூ செடியிலும், பூ பூக்காமல், கிளைகள் உயரமாக வளர்ந்தால் அதை வெட்டி விட்டு விடுங்கள். செடிகளில் இருக்கக்கூடிய சத்தை தேவையில்லாமல் அந்த கிளை உறிஞ்சும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக, மல்லிகைப்பூவை பரித்த பின்பு, அதற்கு கீழே சிறிய காம்பு இருக்கும் அல்லவா?. பூக்களை பறித்து பின்பு, அந்த கப் வடிவத்தில் காம்பு இருக்கும். அதையும் சேர்த்து வெட்டு விட்டீர்கள் என்றால், அந்த இடத்தில் சீக்கிரமாகவே மற்றொரு கிளை தழைத்து, அதில் சீக்கிரமாகவே பூ பூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அரும்பை வெட்டவில்லை என்றாலும், பூ பூக்கும். கொஞ்சம் தாமதம் எடுக்கும்.

நான்காவதாக, மல்லிகைப்பூச் செடிகளுக்கு வெங்காய தோல் உரம் மிகவும் முக்கியமானது. இரண்டு கைப்பிடி அளவு, வெங்காயத் தோலை, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, அந்த டப்பாவிற்கு மூடிபோட்டு, மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை ஊற வைத்து, அதன் பின் அந்தத் தண்ணீரை வடிகட்டி, ஒரு லிட்டர் அளவு நல்ல தண்ணீரோடு கலந்து செடிகளின் வேர் பகுதிகளிலும், செடிகளின் இலை, கிளை பகுதிகளிலும் ஸ்ப்ரே செய்து  விட்டீர்கள் என்றால், செடி நன்றாக வளரும் நிறைய பூ பூக்கும்.

இதேபோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோலின், சத்து மல்லிகை பூச்செடிகளுக்கு அவசியம் தேவை. எலுமிச்சை பழ தோல்களையும், ஆரஞ்சு பழ தோல்களையும் துண்டு துண்டாக வெட்டி, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து,5 நாட்கள் கழித்து, அந்த தண்ணீரை வடிகட்டி, ஒரு லிட்டர் நல்ல தண்ணீரோடு கலந்து, அதன் பின்பாக உங்கள் செடிகளுக்கு ஸ்பிரே செய்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தண்ணீரை தாராளமாக சிறிய கப் அளவு வேர் பகுதிகளில் ஊற்றலாம்.

வாரம் ஒருமுறை வெங்காயத் தோல் தண்ணீரை ஊற்றுங்கள். வாரம் ஒருமுறை ஆரஞ்சு பழத்தோல் தண்ணீரை ஊற்றுங்கள். இப்படி சின்ன சின்ன குறிப்புகளை பின்பற்றினாலே பூ பூக்காத மல்லிகை செடி கூட செழிப்பாக பூத்துக்குலுங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News