25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மூத்த குடிமக்களுக்கான சளி, இருமல் தீர்க்கும் சித்த மருத்துவ முறைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூத்த குடிமக்களுக்கான சளி, இருமல் தீர்க்கும் சித்த மருத்துவ முறைகள்.

முதுமையில் ஏற்படும் இருமல், சளி, தொண்டைக் கரகரப்பு மற்றும் எரிச்சலைக் குணப்படுத்த எளிய வீட்டு வைத்திய முறைகள்:

  • துளசி இலை: காலையில் வெறும் வயிற்றில் இரண்டு துளசி இலைகளை மென்று சாப்பிட்டு,  வெந்நீர் குடிக்க வேண்டும். இதில் உள்ள Eugenolஎன்ற வேதிப்பொருள் தொண்டைக்கட்டைச் சரிசெய்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
  • தூதுவளை & முசுமுசுக்கை:தூதுவளைக் கீரையை வாரம் இருமுறை துவையலாகச் சாப்பிட நெஞ்சுச்சளி குறையும். முசுமுசுக்கை இலை சாற்றை தோசை அல்லது சப்பாத்தி மாவில் கலந்து சாப்பிட்டாலும் கோழை குறையும்.
  • கற்பூரவள்ளி: கற்பூரவள்ளி இலையை அனலில் வாட்டிப் பிழிந்த சாற்றுடன் (ஒரு டீஸ்பூன்),  தேன் கலந்து காலையில் குடித்தால் இருமல் மற்றும் சளி குணமாகும்.
  • தும்பைப் பூ: 4-10 தும்பைப் பூக்கள் மற்றும் 2-6 மிளகை நல்லெண்ணெயில் வறுத்து, அரைத்து, வெல்லத்துடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு மற்றும் கமறல் உடனே நீங்கும்.

வெற்றிலை & மிளகு: இரண்டு இளம் வெற்றிலைக்குள் 2-6 மிளகு வைத்து மடித்து மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடிக்க வேண்டும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்புத் திறன் (Anti-bacterial) கபத்தைச் சேர்க்காமல் தடுக்கும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News