25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை  காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், குழந்தை திருமணம் தடுப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை  காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், குழந்தை திருமணம் தடுப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், விருதுநகர்  மாவட்ட ம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று (09.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்களின் தலைமையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, நடத்தப்பட்டு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டன.அதன் ஒரு பகுதியாக நாட்டுப்புற கலைக் குழுவினரின் நாடகம் மற்றும் பாடல் வழியே, பெண் குழந்தை திருமணம் குறித்தும், இளம் வயது கர்ப்பம் குறித்தும், மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச எண்கள் (1098 (ம) 181 ) ஆகியவை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டன.

  இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் கி.திலகம், மாவட்ட சமூக நல அலுவலக களப்பணியாளர்கள், மாவட்ட மகளிர் அதிகார மையம் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News