25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இசையமைப்பாளர் தேவாவை ஆஸ்திரேலியா தமிழ் கலைமற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் சமீபத்தில் கெள‌ரவித்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இசையமைப்பாளர் தேவாவை ஆஸ்திரேலியா தமிழ் கலைமற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் சமீபத்தில் கெள‌ரவித்தது.

 தமிழ் திரையுலகில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர் தேனிசைத் தென்றல் தேவா தான். இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரகுமான் என்ற இரண்டு ஜாம்பவான்களும் மலை போல நின்று கொண்டு இருந்த காலத்திலும் இவர், உச்ச நட்சத்திரமான ரஜினி, கமல் உள்ளிட்டவர்களுடன் பணியாற்றி, பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். தேவாவின் பாடல் என்றாலே அதற்கு தனிமதிப்பும் தனிரசிகர்களும் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது தேவாவுக்கு ஆஸ்திரேலிய அரசு, அவர்களின் நாடாளுமன்றத்தில் உள்ள அவைத்தலைவர் இருக்கையில் அமர வைத்து செங்கோலைக் கொடுத்து அழகு பார்த்துள்ளது என்றால், அவரது புகழ் உலகம் முழுவதும் பரவி உள்ளது என்பதற்கான சான்றுதான் அது என்று பலரும் பேசி வருகிறார்கள்.

தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை அளித்ததை அளித்தனர். குறிப்பாக அவைத்தலைவர் இருக்கையில் அமரவைத்து, செங்கோலைத் தந்ததற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு தேவா நன்றி. தமிழ் திரை இசையில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என்று அன்புடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவை ஆஸ்திரேலியா தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் சமீபத்தில் கெள‌ரவித்தது.

ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த தேவாவும் அவரது இசைகுழுவினரும் ஆஸ்திரேலிய அரசுக்கு இதற்காக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேனிசைத் தென்றல் தேவா கூறியதாவது:"ஆஸ்திரேலிய தமிழ் கலைமற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். எனக்கும் எனது இசைகலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கௌரவத்தை வழங்கியதற்காக அன்புள்ள திரு. லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செப்டம்பர்24ம் தேதி மாலையில்,ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டு,அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டு,மரியாதைக்குரிய செங்கோல் வழங்கப்பட்டது. இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல,உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு இந்த பெருமைமிகு தருணத்தில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது36ஆண்டுகால இசைப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் எனது மிகப்பெரிய‌ பலமாக இருந்து வருகிறது. இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *