25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ரித்திகா 'தங்கம்’
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ரித்திகா 'தங்கம்’

 22 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் தாய்லாந்தில்,பெண்களுக்கான 80+ கி. கி. எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் ரித்திகா 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அசெல்டோக்டாசினை வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

 இந்தியாவின் யாத்ரி படேல்  பெண்களுக்கான 57 கி.கி., பிரிவு பைனலில் 2-3 என, உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவாவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.மற்றொரு பைனலில் (60 கி.கி.,) இந்தியாவின் பிரியா 2-3 என சீனாவின் யூ டியானிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

 இந்தியாவின் நீரஜ் ஆண்களுக்கான 75 கி.கி., பிரிவு பைனலில் உஸ்பெகிஸ்தானின் ஷவ்கட்ஜோன் போல்டேவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். மற்றொரு பைனலில் (90+ கி.கி.,) இந்தியாவின் இஷான் கடாரியா, உஸ்பெகிஸ்தானின் கலிம்ஜோன் மாமாசோலியேவிடம் வீழ்ந்தார்.

22 வயதுகுட்பட்டோர் பிரிவில் ஒரு தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்ற இந்தியா 4வது இடம் பிடித்தது. இதன் 19 வயதுகுட்பட்டோர் பிரிவில் இந்தியாவுக்கு 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என, 14 பதக்கங்கள் கிடைத்திருந்ததன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News