25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கோவிலின் காவலனாக யாளிகள்,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவிலின் காவலனாக யாளிகள்,

டைனோசர் போன்ற ராட்சத விலங்குகள் இந்த மண்ணில் நடமாடி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போல், நமது நாட்டில் யாளி என்ற ஒரு மிகப்பெரிய விலங்கு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. கோவில்களில் காணப்படும் யாளி என்ற உயிரின சிலை இதற்கு ஆதாரமாக உள்ளது.

சிங்கமுகமும், யானையின் துதிக்கை மற்றும் வலுவான உடலுடன் காணப்படும் யாளி, இந்த நிலத்தில் வேறு எந்த விலங்குகளாலும் வெற்றி கொள்ள முடியாத ஒரு விலங்காக வலம் வந்ததாகவும், இவை தெய்வங்களின் வாகனமாக இருந்ததாகவும் மக்களிடம் நம்பிக்கை நிலவியது.இதன் காரணமாகவே, இந்த விலங்கு முற்கால அரசர்களால் போற்றப்பட்டு கோவில்களில் அவற்றுக்கு மிகப்பெரிய சிலைகள் அமைக்கப்பட்டன.

ராஜராஜ சோழன் கட்டிய பிரமாண்டமான தஞ்சை பெருவுடையார் கோவிலில் பல்வேறு வகையான யாளிகளை அடையாளம் காட்டும் வகையில் யாளி வரிசை என சிலைகள் உள்ளன.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பெருங்கோவில்களில் பெரிய அளவிலான யாளி சிலைகள் காணப்படுகின்றன.

இந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழேதான் யானை சிலைகள்அமைக்கப்பட்டுள்ளன. யானையை விட பல மடங்கு பெரிய அளவிலான உருவம் கொண்டவையாக யாளிகள் இருந்ததாக கதைகள் கூறுகின்றன.

பொதுவாக, இந்த யாளி என்ற ராட்சத உயிரினங்கள் என்பவை பண்டைய தமிழர் நாகரிகமான கடலில் மூழ்கிய லெமூரிய நாகரிகத்தில் வாழ்ந்த மிருகங்கள் என்று நம்பப்படுகிறது. சிம்மயாளி, மகர யாளி, யானை யாளி என்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்த யாளிகள் கோவில்களை பாதுகாப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாக, யாளி சிலைகளை வீடுகளிலும் வைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News