25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திருச்சுழியில் மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருச்சுழியில் மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதி, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில்   (18.03.2026) சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு, மண்டல அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

1. மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு செல்லக்கூடிய வழிகள் மற்றும் மாற்று வழிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

2. வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் இருப்பின் அவற்றினை சரிசெய்யும் பொருட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்து சரிசெய்யப்பட வேண்டும்.

3. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

4. வாக்குச்சாவடி பகுதிகளில் கட்சி கொடிகள், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் இருப்பின் அவற்றினை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

5. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் போது மண்டல அலுவலர்கள் தகுந்த பயிற்சியினை அளித்திட வேண்டும்.

6. வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.

7. தேர்தல் நாளுக்கு முந்தைய தினம் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் எடுத்துச் செல்லப்படும் படிவங்கள் மற்றும் தேர்தல் நாளன்று பயன்படுத்தப்படும் பொருட்கள் எண்ணிக்கையினை விடுபடாமல் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

 8. சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்ட, வாக்குப்பதிவு இயந்திரமா என்பதை சரிபார்த்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

9. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி அலுவலர்களின் பணிகள் குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.

10. வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதேனும் ஏற்படின் உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்குத்  தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,  மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *