25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


4 வயதில் உலக சாதனை படைத்த கோவை சிறுவன்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

4 வயதில் உலக சாதனை படைத்த கோவை சிறுவன்!

உலக நாடுகளின் கொடிகளை துல்லியமாக அடையாளம் காண்பதில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய கோவையைச் சேர்ந்த 4 வயது சிறுவன் தேஜஸ்கந்தன் ஏ. வெங்கடேஷ், உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

அவர் 62 நாடுகளின் தேசியக் கொடிகளை சரியாக அடையாளம் கண்டு சாதனை படைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்தியா வரைபடப் புதிரை வெறும் 1 நிமிடம் 35 விநாடிகளில் நிறைவு செய்துள்ளார். உலக வரைபடத்தை 7 நிமிடங்களிலும், ஐரோப்பா வரைபடப் புதிரை சுமார் 3 நிமிடங்களிலும் முடித்துள்ளார்.

அவரது சாதனை ஆகஸ்ட் 14, 2026 அன்று BOOK OF WORLD RECORDS-ல் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு வயதிலேயே உலக நாடுகள், கொடிகள் மற்றும் வரைபடங்கள் குறித்த தனது நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தியுள்ள இந்தச் சிறுவனின் சாதனை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News